அரசியல் இந்தியா செய்திகள் தமிழகம் வைரல் நியூஸ்

கொலை வழக்கில் 5 பேர் கைது – இருவர் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான பி.எப்.ஐ(P.F.I) அமைப்பை சேர்ந்தவர்கள்! #JusticeForRamalingam

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.

நேற்று காலை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதை கண்டித்துப் பேசிய அவர் பணி முடிந்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட தலைவர்கள் தங்களது கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பேர் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான பி.எப்.ஐ (P.F.I) இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பதற்றம் அதிகரித்துள்ளதால் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

சற்று முன் :- ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் அருகே மீண்டும் ஓர் கார் குண்டு வெடிப்பு

admin

தமிழகத்தில் முதன்முறையாக லாரி ஓட்டுநர் மகன், 29 வயது இளைஞருக்கு MP சீட்….? பாஜக அதிரடி…!

admin

கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே பள்ளியில் இடம்…! இந்துக்களுக்கு எல்லாம் கிடையாது…! மதம் மாற்ற புது டெக்னீக்…!

admin

1 comment

Mahendran February 7, 2019 at 8:26 pm

#justiceforramalingam
I deepest condelence on ramalingam’s culpable homicide by the islamic fundamenlist. May soul be rest into peace

Reply

Leave a Comment