வெற்றி கதைகள்

அமித்ஷாவின் கூட்டணி சமரசங்கள் எதற்காக….! “லீக் ஆன அமித்ஷாவின் ஆப்ரேஷன் பிளான்”

பிஜேபி மூன்று முக்கியமான மாநிலங்களில்
கூட்டணி கட்சிகளுக்காக நிறைய தொகுதி களை விட்டு கொடுத்துள்ளது. ஒன்று மகாராஸ்டிரா
இரண்டு பீகார் மூன்றாவது தமிழ்நாடு.

இதில் மகாராஸ்டிராவில் 48 தொகுதிகள்
பீகாரில் 40 தொகுதிகள் தமிழ்நாடு+ பாண்டி
சேரி- 40 தொகுதிகள் என்று மொத்தமாக 128
தொகுதிகள் இருக்கிறது.இந்த மூன்று மாநில ங்கலும் தான் பிஜேபிக்கு மிக முக்கியமான மாநிலங்கள்.அதிலும் தமிழ்நாடு மிக முக்கிய
மானது.

காரணம் 2004 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா
தேர்தலில் பிஜேபி யை வீழ்த்தி காங்கிரஸ்
ஆட்சி அமைக்க துணை நின்ற ஒரே மாநிலம்
தமிழ்நாடு தான். இங்குள்ள 39 மற்றும் பாண்டி
சேரியில் உள்ள 1 என நாற்பது தொகுதிகளும்
திமுக உருவாக்கிய மெகா கூட்டணி மூலம்
காங்கிரஸ் கட்சிக்கு சென்றதால் தான் 2004 ல்
காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்பட்டது.

அதனால் தான் அமித்ஷா தமிழகத்தில் இருந்து
அதிக எம்பிக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடை
த்து விடக் கூடாது என்பதற்காகவே பிஜேபி க்கு
அதிக தொகுதிகள் கிடைக்க வில்லை என்றா
லும் கூட பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகள் அளித்து பிஜேபிக்கு கொண்டு
வர அதிமுகவிடம் கூறி இருந்தார்.

இன்னொரு முக்கியமான விசயம் என்ன வென்
றால் பாட்டாளி மக்கள் கட்சியை காங்கிரஸ்
கூட்டணிக்கு எப்படியாவது கொண்டு வரவே ண்டும் என்பதற்காகவே தமிழக காங்கிரஸ்
கட்சியின் செயல் தலைவராக விஸ்ணு பிரசாத்
நியமிக்கப்பட்டு இருந்தார்.

இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஒரே அசைன்
மெண்ட் பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியும்
காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்
என்பதே..

விஸ்ணு பிரசாத் யார் தெரியுமா? முன்னாள்
காங்கிரஸ் எம்பி கிருஸ்ணசாமியின் மகன்.
அதோடு முக்கியமானது .அன்புமணி ராமதாசின்
மனைவியான சௌம்யாவின் உடன் பிறந்த
தம்பி. இப்படி குடும்ப உறவின் மூலம் பாட்டா ளி
மக்கள் கட்சியை கூட்டணிக்கு கொண்டு வர
நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக மூலம்
ஆப்பு வைத்து விட்டது பிஜேபி.

அதிமுக பிஜேபி கூட்டணிக்கு வர பாட்டாளி மக்கள் கட்சி விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கு மாறு அதிமுகவுக்கு ஜடியா கொடுத்து தமிழக
கூட்டணி மூலம் மத்தியில் எப்படியாவது ஆட்சி
க்கு வந்து விடலாம் என்கிற காங்கிரஸ் கட்சியின்
கனவை அமித்ஷா சிதைத்து விட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்கு கொண்டு
வர முடியாமல் போனதால் காங்கிரஸ் கட்சி ஸ்டா லின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது.
இதனால் தான் ஸ்டாலின் விரக்தியில் டாக்டர் ராமதாசை திட்டிக்கொண்டு இருக்கிறார்.
போர்க்களத்திற்கு செல்லும் முன்பே சரியா ன படைகளை உருவாக்க முடியாதவன் என்றும்
வெற்றி பெறவும் முடியாது.அவன் தலைவனாக
வும் இருக்க முடியாது

அந்த விசயத்தில் பாமகவை கூட்டணி க்கு கொண்டு வந்ததன் மூலமாக போர்க்களத்திற்கு
செல்லும் முன்பே அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என சில தேர்தல் கணிப்பு அனுபவ சாலிகள் கூறுகின்றனர்

பாட்டாளி மக்கள் கட்சியை இழந்ததன் மூலமாக காங்கிரஸ் கட்சிதமிழ்நாட்டில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி தமிழ் நாட்டில் 2004 மாதிரி மெகா வெற்றி பெற்று தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இணையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எண்ணிக்கை யை உயர்த்தி விடலாம் என்கிற கணக்கும் செல்லாது போய்விட்டது..

அதோடு மகாராஸ்டிரா வில் சிவசேனா கூட்டணி
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சி களு
டன் பிஜேபி உருவாக்கிய கூட்டணி மூலம் காங்
கிரஸ் கூட்டணியின் எண்ணிக்கை 130 ஐ
தாண்ட விடாமல் செய்து விட்டது. ஒரு வேளை
பிஜேபி கூட்டணி விசயத்தில் ஈகோ பார்த்துக்
கொண்டு இருந்தால் மகாராஸ்டிரா பீகார் தமிழ்
நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 60
தொகுதிகளை இழந்து இருக்கும்.

இதனால் தேர்தல்முடிவுகள் வெளிவரும் பொழுது காங்கிரஸ் கூ ட்டணி நிச்சயமாக 190தொகுதிக ளுக்கு அருகில் வந்து நிற்கும்.இதனால் நிச்சய மாக பிஜேபி கூட்டணிக்கு மெஜாரிட்டிகிடைக்காம ல் போகும்.

இதனால் உண்டாகும் குழப்பங்களை பயன்படு த்தி காங்கிரஸ் மாநில கட்சிகளைபதவி ஆசை காட்டி இழுத்து 2004 ல் மாதிரி ஓர் கூட்டணி அரசையோ இல்லை 1996 மாதிரி மாநிலகட்சி
களை முன்னிலை படுத்தி ஒரு ஆட்சியமைக்க வைத்து வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் செய்யும்.
.
இந்த மாதிரி ஒரு குழப்ப நிலை வரக்கூடாது
என்பதற்காகவே பிஜேபி கூட்டணி விசயத்தில்
நிறைய விட்டு கொடுத்துள்ளது. இதனால் தான்
இந்த மூன்று மாநிலங்களிலும் சிவசேனா ஐக்கிய ஜனதா தளம் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளிட மும் பிஜேபி சரண்டர் ஆகியுள்ளது.

ஒரு உண்மையான ராஜதந்திரி தேர்தல் அரசியல்
களத்தில் நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லை யோ நம்முடைய எதிரிகளை வெற்றி பெற விடா மல்யுக்திகளை உருவாக்க வேண்டும். அந்த வ கையி ல் அமித்ஷா மகாராஸ்டிராவில் தேசியவாத
காங்கிரஸ் பீகாரில் ராஷ்டிரிய லோக் தளம் தமி
ழகத்தில் திமுக என்று மூன்று எதிரிக்கட்சிகளின் வெற்றியைதடுக்கவே சிவசேனா ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதிமுக கட்சிகளிடம் நிறை ய காம்ப்ரமைஸ் செய்துள்ளார்.
.
இந்த காம்ரமைசினால் பிஜேபிக்கு தனி மெஜா ரிட்டி கிடைக்காது போனாலும் தேசிய ஜனநாயக
கூட்டணி க்கு தனி மெஜாரிட்டி கிடைத்து விடும்.
இதனால் தேர்தலுக்கு பிறகு உருவாகும் குழப்ப
நிலையை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்து
விடலாம் என்று கனவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி
யின் கனவு கனவாகவே முடியும்.

எனவே அமித்ஷா போர்களத்திற்கு செல்லும்
முன்பே தன்னுடைய எதிரிகளை பலவீனப்படுத்தி
விட்டார். தேர்தல் அரசியலில் முக்கியமான தந்தி ரம் நாம் ஜெயிக்கிறமோ இல்லையோ நம்முடைய எதிரியை ஜெயிக்க விடக்கூடாது.. இதைத் தான்
அமித்ஷா கூட்டணி விசயங்களில் செயல்படு த்தி
வருகிறார்.

:- சரவணன் லட்சுமணன்

Related posts

இறந்துவிடும் என்று தெரிந்தும் குழந்தையைப் பெற்று உறுப்பு தானம் செய்த தாய்

admin

கீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com