அரசியல் இந்தியா செய்திகள் வைரல் நியூஸ்

மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்வேன் என்று கூறியவர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம்: காங்கிரஸ் 

சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரச்சாரங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இம்ரான் மசூத். முன்னாள் காங்கிரஸ் எம் எல் ஏ வான இவர் பிரச்சாரத்தின் போது மோடிக்கு எதிராக கொலை வெறி பிடித்து பிரச்சாரம் செய்தார்.

இசுலாமியர்கள் வசிக்கும் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் மோடி மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் நான் சும்மாக விடமாட்டேன். அவரை கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்வேன் என பேசிவந்தார். இவருடைய கொலை வெறி பேச்சால் சாதாரணமான முன்னாள் எம் எல் ஏ வாக இருந்த இவர் மாநிலம் முழுவதும் பிரபலமானார்.

இவருடைய கொலைவெறி பேச்சையும், தைரியத்தையும் பாராட்டி மாநில காங்கிரஸ் தலைவர்களும், ராகுல், பிரியங்கா உட்பட தேசிய தலைவர்களும் தட்டிகொடுத்தனர்.

இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு தலைநகரம் லக்னோவில் காங்கிரசார் நடத்திய பேரணியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்றனர். அப்போது பேரணியில் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பிரியங்கா காந்தி அமர வைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

அவருடன் முன் வரிசையில் இம்ரான் மசூதும் நெருக்கமாக அமர்ந்திருந்ததை பார்த்த பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களான ஜோதிர்லால் சிந்தியா மற்றும் பி.எல் பூனியா ஆகியோருக்கு சமமாக மிகப்பெரிய பொறுப்பு எதையும் வகிக்காத இம்ரான் மசூத் பிரியங்காவுடன் அமர வைக்கப்பட்டிருந்தது பலருக்கு அதிர்ச்சியும், வியப்பையும் ஏற்படுத்தியது.

கொலை வெறி பிடித்த பயங்கரவாதியுடன் உட்கார்ந்து பிரியங்கா காந்தி பேசி வந்ததை பல பத்திரிகைகள் கண்டித்து எழுதின.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடாளுமன்ற தேர்தலை அடுத்து தேர்தல் கமிட்டி குழு, பிரச்சாரக்குழு, தேர்தல் செயல்முறை மற்றும் திட்டக்குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுக்களை அமைத்து அதற்கான ஒப்புதலை வழங்கி பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில் தேர்தல் பணிக்குழு பட்டியலில் இம்ரான் மசூத் பெயரும் இடம் பெற்றுள்ளது பலரை மேலும் வியப்புக்குள்ளாக்கியது. ஒரு வேளை காங்கிரஸ் ஜெயித்து வந்துவிட்டால் இம்ரான் மசூதை கேபினட் அமைச்சராக கூட பிரியங்காவும், ராகுல் காந்தியும் நியமித்துவிடக் கூடும் என பலர் வியப்பு தெரிவித்துள்ளனர்.

மோடியை கொலை செய்வேன் எனக் கூறிய ஒரே காரணத்துக்காக ஒரு கொலை வெறி பிடித்தவனை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பிரதமர் மோடியோ இவர்களின் தந்தையான இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் விஷயத்தில் தேச நலன், தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டே எச்சரிக்கையாக நடந்து வருகிறார் என்பதை பலர் ஒப்பிட்டு பார்த்து வியக்கிறார்கள்.

Source :- kathir

Related posts

அந்தர் பல்டி அடித்த ராகுல்:- கோவா முதல்வர் பாரிக்கருடன் ரபேல் ஒப்பந்தம் பற்றி நான் பேசவே இல்லை..! #RafaleInternalNoteLeak #RafaleDeal #RafaleCongSelfGoal

admin

அதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த VAO – க்கள் முடிவு!

admin

திமுகவில் முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு சீட்….. கொதிக்கும் திமுகவினர்…!

admin

Leave a Comment