ஆக்கிரமிப்பு காஷ்மீர், மற்றும் எல்லையை தாண்டி சுமார் 150 கிலோ மீட்டரில் உள்ள பாலகோட் வரை எதிரிநாட்டின் உள்ளே சென்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250 முதல் 300 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை போர் விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது, இன்று காலை 3.30 மணயளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். புல்வாமாவில் தாக்குதலுக்கு பின், இந்தியா அளித்த பதிலடியில் பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 250- 300 வரை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தகவலகள் வந்த வண்ணம் உள்ளன..!
ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், பாலகோட், முசாபார்பாத், சக்கோட்டி பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.