தென்ஆப்பிரிக்காவில், இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாகக் கூறியவர் சிக்கலில் மாட்டியிருக்கிறார்...!
ஏற்கனவே இந்த விடியோவை நான் நமது முகநூல் பக்கத்தில் பதிந்து இருந்தோம், link :- https://m.facebook.com/story.php?story_fbid=2036392236480783&id=1970095939777080
பிணத்தை உயிர் பிழைக்க வைக்கும் அற்புதம்
சவப்பெட்டியில் இருக்கும் இறந்தவரின் உடலைப் பார்த்து, ‘‘எழுந்திரு, எழுந்திரு!’’ என்று மத போதகர் ஒருவர் கத்துகிறார்.உடனே, இறந்தவர் மெதுவாக எழுந்து நேராக உட்காருகிறார். அங்கு கூடியிருப்போர் ஆச்சரியமடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர்.இந்தக் காணொலி தென்ஆப்பிரிக்காவில் சமீபத்தில் பரபரப்பாகப் பரவியது.இது ஒரு நவீன கால அற்புத செயலாக கூறப்பட்டாலும், பலரும் இதை நம்பத் தயாராக இல்லை.
ஏமாற்று வேலை
போலி கம்பெனி லோகோ ஸ்டிக்கர்
சடலத்தைக் கொண்டு செல்ல வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுக்கச் சென்றபோது, கிங்ஸ்- குயின்ஸ் இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்துக்கு நம்பகமாகத் தோன்றுவதற்காக பிளாக் போனிக்ஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை தனியார் காரில் ஒட்டி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மாட்டி கொண்ட செட்டப் ஆள்
இந்த உயிர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்ட நாளில், உயிர்த்தெழச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மனிதர், இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பணியிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். ஆனால், அவர் தனது ‘சொந்த’ இறுதிச்சடங்கில்தான் பங்கேற்கப் போகிறார் என்ற உண்மையைக் கூறவில்லை.
Source :- தினத்தந்தி