அரசியல் தமிழகம் பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

BREAKING- பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, காவல்துறை 4 பேரை கைது செய்தது. இந்நிலையில், இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன் கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ பதிவு தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.

இந்த பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மிரட்டியதாக 4 பேர் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதில் அரசியல் கட்சியினரின் வாரிசுகளுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார் . இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி-யின் பெண் எஸ்.பி ஒருவர் இந்த வழக்கை விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.

Related posts

குற்றவாளி கம்யூனிஸ்ட் என்பதால் காப்பாற்ற துடிக்கும் திமுகவினர்..! கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல…! ஆதாரத்துடன்..!

admin

தமிழகத்தில் இன்று “பனங்காட்டுப் படை” என்கிற புதிய கட்சி ஆரம்பம்…!

admin

சீமான் நண்பர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

admin

1 comment

Vincent DI March 15, 2019 at 10:26 am

No comments.

Reply

Leave a Comment