சென்னை :- பாஜகவில் 29 வயது இளைஞருக்கு MP சீட் கொடுக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளது..!
யார் அந்த இளைஞர்:-
ஆம் இந்த தகவல் கசிந்ததை ஒட்டி யார் அந்த பிரபலம் என சற்று விஷயத்தை ஆராய துவங்கினோம்.!
தமிழக பாஜகவுக்கு இந்த முறை தமிழக அதிமுக கூட்டணியில் 5 MP தொகுதி ஒதுக்க பட்டுள்ளது..! இந்த முறை பாஜக சற்று வித்தியாசமாக யோசித்து, ஐந்தில் ஒரு தொகுதி பாஜக இளைஞ்சர் அணிக்கு வாய்ப்பு அளிக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாம்…!
அதில் பாஜக இளைஞ்சர் அணி தலைவர், மற்றும் சில நிர்வாகிகள் ஒரு முகநூல் பிரபலத்தை முன்மொழிந்ததாக தெரிகிறது.! அவர் தான் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த லாரி ஓட்டுபவரின் மகன், முகநூல் பிரபலம் DSP என்கிற பாண்டிய ராஜன் (பாஜக மாநில இளைஞர் அணி மாணவர் பொறுப்பாளர்) , சபரிமலை பிரச்சனை, திருபுவனம் ராமலிங்கம் கொலை விவகாரம் உட்பட, பல விசயங்களில் முகநூலில் காரசாரமாக வீடியோ பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் தான் இவர்..!
பாஜகவுக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது கல்லூரி மாணவர்கள் பாஜக மீது சற்று அதிருப்தியான மனநிலையில் இருந்து வந்த சூழ்நிலையிலும், DSP மற்றும் அவர்கள் குழுவினர் நடத்தி வரும் young india organization என்கிற அமைப்பின் மூலமாக தமிழகம் முழுவதும் சுமார் 100ற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சென்று மாணவர்கள் மத்தியில் மத்திய அரசு திட்டங்கள் பற்றி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு எடுத்துரைத்து மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது..!
மேலும் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளுக்கு சென்று தன்னம்பிக்கை முகாம்களை நடத்தி வந்துள்ளார்..!
சில அரசு பள்ளிகளை தத்தெடுத்து கட்டட வேலை பாடுகளும் செய்தகாக தெரிகிறது…!
வாய்ப்பு கிடைத்தால் எந்த தொகுதி கிடைக்கும்..?
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் 5- ல் ஒரு தொகுதி இளைஞ்சர் அணிக்குத்தான் என்பது உறுதியாகி விட்டது..!
இதில் ராமநாதபுரம் தொகுதி இளைஞர் அணியுணருக்கு ஒதுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது..!மேலும் இந்த தொகுதியில் போட்டியிட பல மூத்த தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்…! தெரிகிறது..!
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் தொகுதி மூத்த பாஜக நிர்வாகிகளுக்கா அல்லது இளைஞர் அணியிணருக்கா..? என போட்டி நிலவி வருகிறது…! இளைஞர் அணிக்கு கிடைத்து விட்டால் அதில் பாண்டியராஜனுக்கு கொடுக்க அதிகவாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்..!