திருச்சி மார்ச் 17
திருச்சி விமான நிலையத்தில் ரூ10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்.
இன்று காலை துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது முகம்மது ஜவாஹிர் (வயது 26 ) என்ற பயணி தனது உடைமையில் ரூ 9.62 லட்சம் மதிப்புள்ள தலா 100 கிராம் எடை கொண்ட மூன்று தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பிடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.அதிலும் மாட்டிக்கொள்பவர்கள் பெரும்பாலும் ராமநாதபுரம் அதனை சுற்றியுள்ள இஸ்லாமிய சமுகத்தினராகவே இருக்கின்றனர்..!
இவர்களை இயக்கும் தலைவர்களை இன்னுமா காவல்துறை கண்டுபிடிக்க வில்லை..? அல்லது கண்டுகொள்ளவில்லையா..?