நாகப்பட்டினம்

9ஆண்டுகளாக மின்வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்

9ஆண்டுகளாக மின்வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 9 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.எருக்கூர் கிராமம் கணேசன் நகர் மக்கள் அடிப்படை வசதியின்றி இரவில் இருளிலேயே வாழ்ந்து வருகின்றனர். பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மின் இணைப்பு கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..!

மேலும் 5 மின்கம்பங்கள் புதிதாக அமைத்து மின் இணைப்பு வழங்க 2 லட்சம் ரூபாய் பணம் கட்டினால்தான் வழங்க முடியும் என மின்வாரியம் கூறியதால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment