தேர்தல் களம் 2019

கனிமொழியை டெபாசிட் கூட வாங்க விடமாட்டோம்.! கைவிட்ட அனைத்து ஜாதி அமைப்புகள். Dr.தமிழிசைக்கு சாதகமான சூழல் உற்றாகத்தில் பாஜகவினர்

கீதா ஜீவன் ஆடியோ:-

உதறி தள்ளிய திருகுல அமைப்புகள்

இப்படி ஒருதலைபட்சமாக கீதா ஜீவன் பேசிய பேச்சுக்குதான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி அது இன்றைய தேதிவரை குறையாமல் உள்ளதாம். தேர்தல் பிரச்சாரத்தின்போது, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களுக்குள் கீதாஜீவனை பிரச்சாரத்திற்க்கே நுழைய விடமாட்டோம் என சில திருகுல அமைப்புகளை சேர்ந்தவர்களும் அறிவித்திருந்தார்கள்.

கனிமொழியை கைவிட்ட நாடார் அமைப்புகள் :-

தூத்துக்குடியை மையமாக கொண்டு பல நாடார் அமைப்புகள் உள்ளன.அதன் தலைவர்கள் பலரும் தூத்துக்குடியில் தான் இருக்கின்றனர்.மேலும் அவர்களில் மிக முக்கியமான தலைவர்களில் சுபாஷ் பண்ணையாரும் ஒருவர்.

அவர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்ற வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலில் தங்கள் ஆதரவினை தெரிவித்தார், அந்த வேகத்தோடு “பனைங்காட்டு படை” என்கிற கட்சியையிம் ஆரம்பித்துள்ளார், அந்த கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஒரே மித்தமாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தங்கள் ஆதரவினை தெரிவித்து பிரச்சாரத்தில் கலந்து கொள்ள பண்ணையார் உத்தரவிட்டுள்ளார்.,

மேலும் தூத்துக்குடி தொகுதியை பொறுத்த மட்டில் அதிமுக சென்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கட்சி.

கனிமொழியை கைவிட்ட வெள்ளாளர் சமூகத்தினர் :-

மத்திய மோடி அரசு 10 % இட ஒதுக்கீடு செய்தது வெள்ளாளர் சமுகத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் வெள்ளாளர் ஓட்டு மட்டுமே கிட்ட தட்ட 1,50,000மேல் உள்ளது..! தூத்துக்குடி சுற்று வட்டார வெள்ளாளர் சமூக மக்கள் அனைவரும் தங்கள் ஓட்டினை தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தான் போட வேண்டும் என தங்கள் சங்கத்தின் மூலம் தீர்மானம் ஒன்றை சென்ற வாரம் போட்டுள்ளனர்..!

அதிருப்தி

அன்று கீதா ஜீவன் பேசியது அத்தனையும் இன்றைக்கு கனிமொழிக்கு எதிராக திரும்பி இருக்கிறது. ஏற்கனவே வரும் தேர்தலில் திருகுல தொகுதிகளில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், தூத்துக்குடி திமுகவில் இருக்கும் திருகுல தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.மேலும் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி உட்பட சுற்ற வட்டாரங்களில் டாக்டர்.கிஷ்ணசாமி யின் ஆதரவாளர்கள் அதிகம், மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் கீதாஜீவன் ,மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பலர் sterlite மீண்டும் திறக்க ஆதரவுக்கான போராட்டத்தில் பணம் கொடுத்து மக்களை ஒன்று திரட்டியது தூத்துக்குடி மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது..!

பலவீனம்

கனிமொழிக்கு எதிரான நிலைப்பாடு என்றால், அது கண்டிப்பாக தமிழிசை சவுந்தராஜனுக்கோ அல்லது டிடிவி தினகரனுக்கோ தான் சாதகமாக அமையும் சூழல் உள்ளது. இதில் டிடிவி தினகரன் பிரிக்கக்கூடிய ஓட்டுக்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் சற்று தாக்கத்தை ஏற்படுத்தலாம்..! ஆனால் அதிலும் தூத்துக்குடி அமமுக நிர்வாகிகள் நிர்ணயம் செய்ததில் TTV குறிப்பிட்ட சமுதயத்தினருக்கே முக்கிய பொறுப்புகளை வாரி வளங்கியுள்ளதாக அமமுகக்குள் உள்ள பலரும் TTV மீது வருத்தத்தில் உள்ளனர்…! இதனால் அமமுக ஓட்டு பிரித்தாளும் அது குறிப்பிட்ட சமுதயத்தினருடைய ஓட்டாக தான் இருக்கும்.அதுவும் மிக கம்மியான ஓட்டுக்கள் தான், மேலும் திமுகவில் இந்த முறை கீதா ஜீவன் தம்பி ஜெகனுக்கு சீட் கிடைத்து விடும் என்று ஜெகன் ஆதவராளர்கள் ஆர்வமாக இருந்தனர், ஆனால் கிடைக்க வில்லை, இதனால் தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் ஓட்டு கூட தமிழிசை பக்கம் திரும்ப வாய்ப்பிருப்பதாக திமுக வினர் பேசி கொள்கின்றனர்..! எனவே தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை தமிழிசைக்கு வாய்ப்பு இருப்பது தெரிகிறது..! இருந்தாலும் தேர்தல் நெருங்க நெருங்க நிலவரங்கள் மாறவும் வாய்ப்பு அதிகம்..!

இந்த முக்கிய மூன்று ஜாதி அமைப்புகளை ஏதாவது ஒன்று ஒரு பக்கத்தில் இருந்தால் தான் டெபாசிட் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் எந்த முறையும் இல்லாமல் இந்த முறை மூன்று ஜாதிய அமைப்பும் அதிமுகவுக்கு சாதகமாக ஒரே அணியில் நிற்பது தான் டெபாசிட் க்கே வேட்டு வைக்கும்..!

இப்படி அனைத்து சமுதாய மக்களும் கைவிட்ட காரணத்தினால் இந்த சூழல் தொடர்ந்தால் கனி மொழி டெபாசிட் வாங்கும் வாய்ப்பு கூட கடினம் தான்..!

Related posts

மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவை விட தற்போதைய பிரதமர் மோடியின் செலவு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

admin

பிரசாரத்தை பாதியில் நிறுத்திய முதல்வர் எடப்பாடி! தூக்கிவைத்துக் கொண்டாடிய அதிமுக.,வினர்!

admin

திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தால் அந்த கட்சியே தேவை இல்லை..! வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த “பனங்காட்டு படை” தொடர்ந்து “தமிழிசைக்கு” பெருகும் ஆதரவு..!

admin

Leave a Comment