அரசியல் கோவை பொள்ளாச்சி

Republic Tamil-ன் எதிரொலி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகும் திமுக பிரமுகர், குற்றவாளியை காப்பாற்ற தயாராகும் திமுக மாநில வழக்கறிஞர் அணி

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் விசாரணைக்கு‌ ஆஜராகுமாறு சிபிசிஐடி காவல்துறையினர் சம்‌மன் அனுப்பியுள்ள‌ன‌ர்.

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் பல பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Republic Tamil-ன் கட்டுரை :-

கடந்த மார்ச் 11/ 2019 அன்று நம்முடைய செய்தி நிறுவனம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி ஒரு கட்டுரை ஒன்றினை வெளியூட்டு இருந்தது , அதில் உள்ள செய்தி பின் வருமாறு..!

https://republictamil.com/?p=5909
பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கைக் கோரி பிரபலங்கள் பலர் குரலெழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் கைதான முக்கிய குற்றவாளி கனகராஜ் என்கிற திருணாவுகரசின் மிக முக்கியமான நெருங்கிய நண்பர்தான் பொள்ளாச்சியை சார்ந்த திமுக மாணவரணி தென்றல் மணி மாறன்…! இவர் கைதான திருணாவுகரசின் மிக முக்கியமான நண்பர்கள் என தெரிகிறது..!

இந்த சம்பவம் வைரல் ஆகவே , திமுக தென்றல் மணிமாறன் தன் முகநூலில் திருணாவுகரசு உடன் எடுத்த புகைப்படங்களை அழித்துள்ளார்..! தான் தவறு செய்யாத பட்சத்தில் ஏன் அழிக்க வேண்டும்..? தற்பொழுது திருணவுகரசிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போட்டோவையும் அழித்துள்ளார்…! அழித்து விட்டு அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என எண்ணி கொண்டு, கருத்து எதுவும் சொல்லாமல் தானே திருணவுகரசுக்கு எதிராக போராட்டத்திலும் இறங்கியுள்ளார்…!

அழிப்பதற்கு முன் அதை ஒருவர் screen short எடுத்து அதை பரப்பி வருகின்றனர்…!

ஏற்கனவே இந்த வழக்கில் அதிமுகவை சார்ந்த நாகராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியுள் இருந்து அதிமுக நீக்கி உள்ளது குறிப்பிட தக்கது..!

அதிமுக துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு குற்றவாளி கூட தப்பிக்க கூடாது எனவும் பேட்டியளித்துள்ளார்..!

சரி ஒருவரை முன்ன பின்ன சரியாக தெரியாமல் பழகுவது தவறல்ல..! ஆனால் அவர் பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளும் பொழுது ஏன் திருட்டுத்தனமாக பதிவை, போட்டோவை நீக்க வேண்டும்.? அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் …? இங்கு தான் சந்தேகமே வலுக்கிறது ….!

மேலும் தொடர்ந்து பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தன்னை நல்லவன் போல காட்டிக்கொள்ள பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுவது போல பதிவிட்டு வருகிறார்..! வரவேற்க தக்க ஒன்றே..!

பழைய பதிவை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள் அல்லது மறந்து இருப்பார்கள் என அவரே கணித்து கொண்டு அழித்துள்ளாரா என்பது தெரியவில்லை..!

எது எப்படியோ இதில் சம்பந்த பட்ட ஒரு குற்றவாளிகளும் தப்பிக்க கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாகவும், ஒரு குற்றவாளிகள் தப்பித்து விட கூடாது என்பதில் அரசும் உள்ளது.

இதுவே அந்த கட்டுரை ,இந்த கட்டுரையின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தங்கள் வேகத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

தற்பொழுது பொள்ளாச்சியில்:-

இந்நிலையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பொள்ளாச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு, சிபிசிஐடி போலீசார் வரும் 28ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. திருநாவுக்கரசிடம் திமுக மாவட்டச் செயலர் மகன் மணிமாறன் நன்றாக பழகி வந்ததாகவும், ஃபேஸ்புக் மூலம் திருநாவுகரசிடம் பல தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதனால் சிபிசிஐடி போலீசார் அவரை விசாரிக்க சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள பார் நாகராஜக்கும் வரும் 28ம் தேதி சிபிசிஐடி காவல் துறையிடம் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால் திமுகவின் மாநில வழக்கறிஞர் அணி அவரை கேஸில் இருந்து விடுவிக்க பல வழிமுறைகளை தேடிக்கொண்டு இருக்கிறது, அவர் சிபிசிஐடி யுடம் நேரில் ஆஜர் ஆனால் பல திமுக முக்கிய புள்ளிகள் மாட்டுவார்கள் என தெரிகிறது, அதே சமயம் 28ஆம் தேதி அவர் நேரில் ஆஜாராகவிடில் அவர் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது…!

Related posts

இந்திய அளவில் முதல் ட்ரெண்ட் ஐ பிடித்த #TNWelcomesModi , மற்றும் கடைசி இடத்தில் #HBD_Jocker_Stalin….! மோடியை வருகையை ஏன் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்…?

admin

கலைஞரின் திட்டத்தை செயல்படுத்த உள்ள முதல்வர்

பாகிஸ்தானில் இருந்து கேஸ் சிலிண்டருக்குள் வைத்து 80 KG ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் கடத்தல், விசாரணையில் புதிய தகவல்கள்

admin

Leave a Comment