கோவை

பெண்ணிடம் தவறாக நடந்த திமுக செயற்குழு உறுப்பினர் கைது

கோவையை சேர்ந்த திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரன் என்பவர், ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட புகாரின் பேரில் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோவையை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருந்தவர். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சூலூர் திமுகவின் அலுவலகத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் மற்றும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் வைத்து சந்திரனை கைது செய்தனர்.

கடந்த 8-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக தேர்தல் நேர்காணலுக்கு சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில், ரயிலில் பயணம் செய்யும்போது அதே பெட்டியில் பயணம் செய்த பெண்ணின் மீது சந்திரனின் கால் பட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் கூச்சலிடவே அதே பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி உள்ளார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன், சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் தவறுதலாக நடந்து விட்டதாக கூறி ரயில்வே போலீஸாரிடம் எழுதிக்கொடுத்து சமாதானம் செய்துவிட்டு கோவை சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக கூறி சேலம் ரயில்வே போலீசார் சூலூர் வந்து திமுக செயற்குழு உறுப்பினர் சந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு திமுக செயற்குழு உறுப்பினர் கைது செய்தது அரசியல் சதி என திமுகவினர் தெரிவித்து உள்ளனர்.

Related posts

கொங்கு மண்டலத்தில் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும்! -வானதி சீனிவாசன்

admin

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க பிரமுகரின் மகன் கைது…!

admin

ஸ்டாலினை நேரடியாக விமர்சித்த :-குட்டி கேப்டன் கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்?’ #VijayPrabhakaran #DMDK

admin

Leave a Comment