தேர்தல் களம் 2019

திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தால் அந்த கட்சியே தேவை இல்லை..! வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த “பனங்காட்டு படை” தொடர்ந்து “தமிழிசைக்கு” பெருகும் ஆதரவு..!

நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற பகுதிகளில் அதாவது தென் தமிழகத்தில் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட சமுகத்தினரால் ஆரம்பிக்க பட்ட கட்சி தான் பானங்காட்டு படை, கடந்த வாரம் சேலத்தில் வைத்து ஆரம்பிக்க பட்ட கட்சி தான் இது..!

நாடார் சமூகத்தில் உள்ள சில முக்கிய தலைவர்களால் ஆரம்பிக்க பட்ட கட்சி முதலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முதலில் தங்கள் ஆதரவினை தெரிவித்ததாக தெரிகிறது..! பின்பு நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை என அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டது…!

அதன் பின்பு சுபாஷ் பண்ணையார் அவர்கள் எந்த கட்சி நாடார்களுக்கு சாதகமாக விளங்குகிறது அதற்கு தங்கள் ஆதரவினை தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனை ஒட்டி நேற்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் தங்கள் கட்சியின் ஆதரவினை நேரடியாக அதிமுக பாஜக கூட்டணிக்கு தெரிவித்தார். இதனையடுத்து பனங்காட்டு படையானது தங்கள் ஆதரவினை நேரடியாக திமுகவிற்கு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தது

இதற்குப் பிறகு பனங்காட்டு படையைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை கலந்து ஆலோசிக்கப்பட்டது அதன் பிறகு பலரும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பனங்காட்டு படை தங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு online ஓட்டெடுப்பு நடத்தியது அதில் பனங்காட்டு படை திமுகவிற்கு ஆதரவு பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டது..!

அதற்கு பனங்காட்டு படையைச் சேர்ந்த சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தினை தெரிவித்திருந்தனர் அதில் சுமார் 85% பேர் திமுகவுடனான ஆதரவு தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர் மேலும் பலர் பனங்காட்டு படுத்திய ஓட்டெடுப்பின் கீழ் தங்கள் கருத்தினை எழுதியுள்ளனர் அதில் திமுகவுடனான கூட்டணி பனங்காட்டு படை தானே கடலில் கல்லைக் கொண்டு கட்டிக்கொண்டு குதிப்பதற்கு சமம் எனவும் மேலும் நாடாரின் ஓட்டு நாடாருக்கு எனவும் தங்களுடைய ஓட்டு என்றும் தமிழிசைக்கு எனவும் சரத்குமார் அவர்கள் ஆதரித்த அதிமுக பாஜக கூட்டணிக்கு எனவும் தங்கள் கருத்துகளை தொடர்ந்து எழுதிய வண்ணம் உள்ளனர் இதனை தொடர்ந்து பனங்காடு படை தமிழிசைக்கு ஆதரவான பதிவுகளை தங்கள் முகநூல் பக்கத்தில் பதிந்து வருகிறது ஒருவேளை படையின் திமுக ஆதரவு நிலைப்பாடு கட்சியின் உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் அந்த ஆதரவு திரும்ப பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பலரும் இந்த ஆதரவு திமுகவின் ஆதரவினை எதிர்த்து தங்கள் கட்சியை விட்டு விலகுவதாகவும் கருத்துகளை எழுதி வருகின்றனர் பனங்காட்டு படையின் இந்த திமுக ஆதரவு நிலைப்பாடு தொண்டர்களிடையே மாபெரும் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது என்பது தெளிவாக நமக்கு உணர்த்துகிறது…!

Related posts

கள்ள ஓட்டு போட காரில் கொண்டுவரப்பட்ட ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் திமுக நிர்வாகி கைது…!

admin

தூத்துக்குடியில் திமுகவினர் மீது பாயும் அடுத்தடுத்த புகார்கள். விஸ்வரூபம் எடுக்கும் ஸ்டெர்லைட் பிரச்சனை..! விழித்துக்கொள்வார்களா மக்கள்…?

admin

ராகுல்காந்தி பயந்து கேரளா ஓடிவிட்டார் :- அமித்ஷா

admin

1 comment

Sevuga perualsevugan March 29, 2019 at 3:57 am

BJP VETRI

Reply

Leave a Comment