வந்து விட்டது வாட்ஸ் அப்பில் ”ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்”:
பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிங்கர் பிரிண்ட் சென்சார் முறையை வாட்சப் நிறுவனம் சோதனை முறையில் மேற்கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் வாட்சப்பை 1.3 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் விரல் ரேகையை வைத்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும் என்ற விதத்தில் புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது வாட்சப் நிறுவனம்.
தற்போது பீட்டா வெர்ஷன் 2.19.83 சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருமுறை விரல்ரேகையை பயன்படுத்தினால் மட்டும் போதும் வாட்சப் எவ்வளவு நேரம் திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் அதன் செட்டிங்சில் இடம் பெற்றிருக்கும்._
_Settings > privacy > use finger print என அமைத்து கொள்ள வேண்டும்._