சிறப்பு கட்டுரைகள்

கடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical strike

கடற்கரை தாதுமணல் – மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical strike

கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழக மற்றும் கேரள கடற்கரை ஓரங்களில் உள்ள தாது மணல் அதாவது அரிய வகை கனிமங்களை (garnet, rutile, Leucoxene, Monazite, Zircon, மற்றும் silimanite) உள்ளடக்கிய கடற்கரையோர தாதுமணலை தனியார் நிறுவனங்களால் தொடர்ந்து அள்ளப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் தாதுமணலில் உள்ள சில வகை தனிமங்களை அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே அள்ள வேண்டும் என்ற விதி முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. 1998 க்கு பின்னர் சில Ilmenite என்ற் கனிமத்தை தனியார்யார் நிறுவனங்களும் குத்தகை எடுக்கலாம் என்று விதி மாற்றம் செய்யப்பட்டு அதன்படியே குத்தகைகள் வழங்கப்பட்டு வந்த்ன.

Monazite என்ற கனிமம் மட்டும் எந்த தனியார் கம்பெனிகளூக்கும் குத்தகை வ்ழ்ங்கப்படவில்லை.
ஒரு தனியார் நிறுவனம் கார்னெட் மணல் அள்ளும் குத்தகை பெரும் பொழுது அவர்கள் கார்னெட் என்னும் கணிமத்தை மட்டும் தனியாக அள்ள முடியாது. கடற்கரை ஓரங்கள் இருக்கின்ற கணிமங்கள் கலந்த மணலை அப்படியே அள்ளிக் கொண்டு அவர்கள் தொழில் கூடத்திற்கு கொண்டு சென்று அவற்றிலிருந்து கார்னெட்என்ற தனிமத்தை பிரித்திருப்பார்கள்
அவ்வாறு கடற்கரையிலிருந்துகொண்டு செல்லப்படும் மணலில் மிக அரிய வகை கனிமங்களான மோனசைட் ரூட்டைல் போன்ற கனிமங்களும் சேர்ந்தே தான் இருக்கும்.

இவற்றில் மோனசைட் என்ற ஒரு அரிய வகை கணிமமானது யுரேனியம் என்ற அணு சக்திக்கு தேவைப்படும் மூலப் பொருள் ஆகும் ஆகையால் மோனசைட் போன்ற கனிமங்கள் Strategic Minerals என்று வகைப்பாடு செய்து மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு இருக்க வேண்டும். மேலும் கதிரியக்க தனிமங்களை கொண்ட கனிமங்கள் அனைத்தும் நமது இந்திய அரசாங்கத்தின் அணுசக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே வரும் கடந்த பல வருடங்களாக கடற்கரையோரங்களில் அள்ளப்பட்டு அவற்றிலிருந்தே கார்னெட் போன்ற கனிமங்களை பிரித்தெடுக்கப்பட்ட பின் எஞ்சி உள்ள கழிவுகளில் நிச்சயமாக மோனசைட் என்ற கதிரியக்கத் தன்மை உடைய கனிமங்கள் அதிக அளவில் இருந்திருக்கவேண்டும் இருந்திருக்கும் அவற்றை குறித்து எந்தவிதமான ஆய்வுகளோ எந்தவிதமான கணக்குகளை எந்த தனியார் நிறுவனமும் நாளது வரை முறையாக பராமரிக்க வில்லை.

இதுகுறித்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பல்வேறு வகையான கேள்விகள் எழுப்பப் பட்ட பொழுதும் முந்தைய மத்திய அரசாங்கம் எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு தேசத்தின் அணுசக்தியை குறித்து எந்தவித கவலையும் இல்லாமலே இருந்து வந்தது.

இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடற்கரையோரங்களில் இயங்கி வந்த அனைத்து தாதுமணல் குத்தகைகளும் அதிமுக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டடு குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கடற்கரையோர தாதுமணல் குறித்த விவரங்களை அரசாங்கத்திடம் கோரியது எனவே மத்திய அரசு தற்சமயம் ஒரு குறிப்பிடத்தகுந்த கொள்கை முடிவெடுத்து அதன்படி அரசாணையும் வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையின்படி மோனோசைட் என்ற அணுசக்தி அணுக் கதிரியக்க கனிமம் உள்ள தாது மனலை எந்த தனியார் நிறுவனமும் அள்ளுவதற்கு குத்தகை வழங்கப்படக்கூடாது என்று ஒரு குறிப்பிடத்தகுந்த கொள்கை முடிவு எடுத்துள்ளது அவ்வாறு பார்க்கையில் தமிழ்நாடு கேரளம் மகாராஷ்டிரம் உட்பட இந்திய கடற்கரையோரங்களில் தாது மணலில் மோனோசைட் அதாவது அணு கதிர்வீச்சு அணு சக்தி கொண்ட கனிமங்களின் இருப்பு ஏற்கனவே நமது ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா என்ற நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது ஆகையால் தமிழ்நாடு கேரளா ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா கடற்கரை ஓரங்களில் உள்ள அனைத்து கனிமங்களின் குத்தகைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் மோனோசைட் மிகச் சிறிதளவே இருந்தாலும் கூட பல இடங்களில் எந்த தனியார் நிறுவனத்திற்கும் தாது மணல் அள்ளுவதற்கான குத்தகை வழங்கப்படக் கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுவெளியில் எந்தவிதமான வாதங்களும் விவாதங்களும் நடத்தப்படவில்லை நமது தமிழ் மீடியாக்கள் எதுவுமே இது குறித்து எந்தவிதமான கலந்தாய்வுகள் விவாதங்களையும் நடத்துவது இல்லை.

இதன் முக்கியத்துவம் குறித்து தெரிந்தே மீடியாக்கள் வேண்டும் என்றே இதை தவிர்க்கின்றனர். இயற்கை போராளிகள்கூட அல்லது சுற்றுச்சூழல் காக்கும் போராளிகள் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்கள் எந்த விதமான விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வில்லை.

மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை எதிர்த்து மணல் மாபியாக்கள் இப்பொழுதே நீதிமன்றத்தை நாட ஆரம்பித்து விட்டனர் ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த விதமான விவாதங்களும் பொதுவெளி நடத்தப்படாததால் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு இல்லாததாலும் நம் தேசத்தின் அணுசக்தியை காப்பாற்ற நாம் தவற விட்டவர்களாகவும்.

ஒரு தேசம் தனக்குத் தேவையான அணுசக்தியை ஆக்க பூர்வமான பயன்படுத்தும் அல்லது அழிவுப்பூர்வமான ஆயுத பயன்பாட்டிற்கு பெறுவதற்காக எந்த அளவுக்கு முனையும் என்பதற்கு கீழே சில லிங்குகளை கொடுத்துள்ளேன் அது என்றும் ஒரு நாடு தனக்கு தேவையான சக்தியைப் பெறுவதற்காக எந்தவிதமான செயல்பாட்டையும் முன்னெடுக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறு இருக்கும் பொழுது நமது கதிரியக்க கனிமங்களை யாரோ ஒரு தனியார் நிறுவன கையில் கொடுத்துவிட்டு அதை ஒரு அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகையால் நாம் ஒவ்வொருவரும் மத்திய அரசால் தற்சமயம் எடுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

மக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை எனில் நமக்கு தெரியாமலேயே நம்முடைய அணுசக்தி நம் எதிரி தேசத்திற்கு அல்லது நம் தேசத்திற்கு எதிரான பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது மேலும் கடந்த காலங்களில் அள்ளப்பட்டு உள்ள கோடிக்கணக்கான டன்கள் தாது மணலில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக் கதிரியக்க கனிமங்களும் கணக்குகளையும் அவை அவற்றின் இருப்புகளையும் (Stock) ஒரு வெள்ளை அறிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட வேண்டியது வரும் மத்திய அரசின் தலையாய கடமையும் கூட.

Timeline: A Brief History of North Korea’s Nuclear Weapon Development

https://www.heritage.org/middle-east/commentary/syrias-nuclear-program-requires-stronger-international-response

https://foreignpolicy.com/2013/07/02/israels-secret-uranium-buy/amp/

https://nsarchive2.gwu.edu/nukevault/ebb432/

சிறப்பு கட்டுரை

திருமலை ராஜா..M.sc.BL

திருச்சி

Related posts

சூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் திமுக மைன்ட் வாய்ஸ்!

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com