தேர்தல் களம் 2019

மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவை விட தற்போதைய பிரதமர் மோடியின் செலவு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐந்தாண்டின் விமான கட்டணத்தை விட தற்போதைய பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண எண்ணிக்கை குறித்தும் அதற்கான கட்டணம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதில் நரேந்திர மோடி பிரதமரா‌‌னதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானம் மூலம் ரஷ்யா, துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 44 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அதற்கான விமானச் செலவு ரூபாய் 443.4 கோடி என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரண்டாவது ஐந்தாண்டு (2009 -2014) ஆட்சி காலத்தில் 38 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான செலவு 493.22 கோடி ரூபாய் என ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மோடி சென்றதை விட மன்மோகன் சிங் செலவினம் சுமார் 50 கோடி ரூபாய் ‌அதிகம் எனவும் ஏர் இந்தியா விமான நிறுவனம் ‌தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் கட்சி மாறும் முக்கிய புள்ளிகள் – வரவேற்று இன்ப அதிர்ச்சி அளிக்கும் திமுக!

admin

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? திணறும் காங்கிரஸ் கட்சி..!

admin

வைத்திருப்பது TVS XL ஆனால் திமுகவின் அழகான வேட்பாளரின் உண்மையான சொத்து நிலவரம் கோடிக்கணக்கில்…!

admin

Leave a Comment