தேர்தல் களம் 2019

அழைப்பிதழ் விநியோகித்து அதிமுக நூதன பிரச்சாரம் கலக்கும் தமிழிசைசௌந்தர்ராஜன் தொகுதி

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அழைப்பிதழ் விநியோகித்து அதிமுக நூதன பிரச்சாரம்

திருமணத்துக்கு அழைப்பிதழ் வைத்து உறவினர்களை அழைப்பது போல் விளாத்திகுளம் அருகே வெம்பூரில் தேர்தல் அழைப்பிதழ் அச்சிட்டு தாம்பூல தட்டில் வைத்து வீடு வீடாக விநியோகித்து இரட்டை இலைக்கும், தாமரை சின்னத்துக்கும் வாக்கு கேட்டு அதிமுகவினர் நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திருமண விழாவுக்கு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி அவர்களை அழைப்பது போல் தேர்தல் அழைப்பிதழ் என்ற தலைப்பில் அழைப்பிதழ்கள் அச்சடித்து விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட வெம்பூரில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் வீதி வீதியாக வீடு வீடாக சென்று தாம்பூல தட்டில் தேர்தல் அழைப்பிதழ் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி தேர்தல் நாளன்று அனைவரும் இரட்டை இலைக்கும், தாமரை சின்னத்துக்கும் வாக்களிக்க கேட்டு அழைப்பிதழ் வழங்கி ஆதரவு திரட்டினர்.
தேர்தல் அழைப்பிதழில் திருமண அழைப்பிதழில் இருப்பது போல் நாள், கிழமை, நேரம், இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள் பக்கத்தில் நிகழும் மங்களகரமான ஸ்ரீவிகாரி வருடம் சித்திரை மாதம் 5ஆம் நாள் (18&4&19) வியாழக்கிழமை வளர்பிறை தசமி திதியும், சதய நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பி. சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்திலும், தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும் முத்திரையிடுவதற்கு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆகியோரால் நிச்சயிக்கப்பட்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழிகாட்டுதலுடன் நடக்கும் தேர்தலில் வாக்காள பெருமக்கள் தவறாது பங்கேற்று தங்களது பொன்னான வாக்கை அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம் என அச்சடித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் களத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வேண்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழ் வைத்து வாக்கு கேட்டு மக்களை சந்தித்த போது நல்ல வரவேற்பு உள்ளது. விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

தொடர்ந்து அழகாபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அழைப்பிதழ் வழங்கும் பணியை அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, புதூர் ஒன்றிய அதிமுக செயலர் ஞானகுருசாமி, புதூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தனஞ்செயன், கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், அதிமுக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வேல்ச்சாமி, சௌந்திரபாண்டியன், பால்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன் தமிழக முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவினை தெரிவித்தார்..!

admin

பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் பாஜகவில் இணைந்தார்

admin

இந்து-முஸ்லிம் மோதல்களை திட்டமிட்டு உருவாக்க போலி செய்தியை பரப்பும் காங்கிரஸ் பினாமி ஊடகம்….! One India Tamil #FakeNews

admin

Leave a Comment