தேர்தல் களம் 2019

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 100 நிர்வாகிகள்..!தேர்தல் முடிவதற்குள் 50,000 நிர்வாகிகள் அதிமுகவில் இணைய தயார். கோபத்தின் உச்சியில் டிடிவி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி கரூர் பரமத்தி வடக்கு ஒன்றியம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகி திரு.சரவணன் அவர்கள் 45-க்கும் மேற்ப்பட்ட அமமுக நிர்வாகிககள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் புலம்பாளையம்பகுதியை சார்ந்த அமமுக கிளை செயலாளர் கனகராஜ், தங்கராஜ் , ராஜ்குமார், தங்கதுரை , சரவணன் , கிருஷ்ணன் , சச்சிதானந்தன் உள்ளிட்ட 55 நிர்வாகிகள்

அக்கட்சியிலிருந்து விலகி,கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.மார்க்கண்டேயன் தலைமையில்,கரூர் மாவட்ட கழக ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில், அஇஅதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.


தொடர்ந்து தமிழகத்தில் அமமுக வில் இருந்து பல கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு தாக்கி வருகின்றனர் கடந்த வாரம் தூத்துக்குடியில் சுமார் 250 நபர்கள் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மதுரை சென்னை கோவை திருப்பூர் நாகப்பட்டினம் கடலூர் ராமநாதபுரம் என பல ஊர்களிலும் இருந்து ஆயிரக்கணக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் இதனால் டிடிவி தினகரன் மிகவும் உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் தேர்தலுக்கு 50 ஆயிரம் நபர்கள் வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கிரண்பேடி குறித்து சர்ச்சை பேச்சு…ராதாரவி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை நாஞ்சில் சம்பத் மீது எடுக்கப்படுமா?

admin

பணபரிமாற்ற மோசடி வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடி சொத்துக்கள் முடக்கம்.!

admin

கருணாநிதி சமாதியில் வைத்து வேண்டி, திமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com