தேர்தல் களம் 2019

டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னிலையில் 40 பேர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அதிர்ச்சியில் திமுக காங்கிரஸ்

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. தமிழ்செல்வன் உட்பட 40-பேர் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் த‌ங்களை இணைத்து கொண்டனர்.

தூத்துக்குடி தேர்தல் காரியாலயத்தில் வைத்து தற்போது சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமாகிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர் இச்சம்பவம் தூத்துக்குடி காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் கடந்த வாரம் சோனியா காந்தியின் உதவியாளராக இருந்த வரும் காங்கிரசின் மிக முக்கியமாக நபராக இருந்த வரும் பாஜகவில் சேர்ந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நகராட்சி ஆய்வாளரை காலனியால் தாக்கிய திமுக நிர்வாகி

admin

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:

admin

கிரண்பேடி குறித்து சர்ச்சை பேச்சு…ராதாரவி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை நாஞ்சில் சம்பத் மீது எடுக்கப்படுமா?

admin

Leave a Comment