தேர்தல் களம் 2019

எனக்கு ஓட்டு போடத்தவன் எவனும் இனி சோறு திங்க கூடாது:-சீமான்

தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் அதன் பிறகு சோறு சாப்பிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் நடந்த கூட்டத்தில் பேசி உள்ளார்.

மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று திமுகவினர் வீடு வீடாக சென்று கூறிவருவதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்திற்கு பாரதீய ஜனதாவை அழைத்து வந்ததே திமுக தான் என்று குற்றஞ்சாட்டிய சீமான், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பா.ஜ.கவை மறைமுகமாக ஆதரிப்பதாக சுட்டிக்காட்டினார்.

பசிக்கு சோறு சாப்பிடும் அனைவரும் தங்கள் கட்சியின் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் அதன் பிறகு சோறு சாப்பிட கூடாது என்றும் சீமான் முழங்கினார்.

அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணியை சீமான் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related posts

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டு எல்லாம் ஜெயிக்க முடியாது..! பின்வாங்கும் பிரியங்கா காந்தி

admin

பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் கொடூரம் கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை

admin

வாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…! மக்கள் வெள்ளத்தில் மோடி…!

admin

Leave a Comment