உற்சாகத்துடன் தாமரைக்கு வாக்குகள் சேகரிக்கும் இளைஞர்கள்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும், திமுக வின் சார்பில் கனிமொழியும் போட்டியிடுகின்றனர், இருவருக்கும் கடுமையான போட்டி நிலவும் சூழ்நிலையில் இளைஞர்களும் புதிய வாக்காளர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்குகள் சேகரிக்க களமிறங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள திமுகவினர் புதிய வாக்காளர்களை கவர திணறி வருகின்றனர். ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் டாக்டர் தமிழிசை அவர்களுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் இளைஞர்களும் களத்தில் இறங்கி இருப்பது பாரதிய ஜனதா கட்சியினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.
இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்களின் வாக்குகளை பெற அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு அது சாதகமாக இருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கோவில்பட்டியில் லட்சுமி மில் மேல காலனி, இந்திரா நகர் ஸ்ரீனிவாச நகர், அத்தைகொண்டான் போன்ற பகுதிகளில் இவர்களால் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. இளைஞர்களின் வருகையால் அந்த பகுதியின் வாக்காளர்களும் உற்சாகமடைந்துள்ளனர்