வெலுத்தது டிடிவி.தினகரன் சாயம்.!
பிஜேபி தயவில் முதல்வராக முயற்சி”பாஜக-வின் அறிவுறுத்தலின் பேரில் கருப்பு முருகானந்தம் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். என்று டி.டி.வி தினகரன் அதிரடி தகவலை சமீபத்தில் வெளியிட்டார்.
பிஜேபி பதிலடி அதிரடி….!
இதற்கு பதிலளித்துள்ள கருப்பு முருகானந்தம் “டிடிவி தினகரனுடன் பேசியது உண்மைதான். ஆனால், குமரி தேர்தல் குறித்துப் பேசவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல டி.டி.வி. தினகரன் தான் முயற்சித்தார்!தேவை ஏற்பட்டால் பா.ஜ.க.யினரை தினகரன் சந்திக்க முயற்சித்தது குறித்த ஆதாரங்களை வெளியிடத் தயார்” என அதிரடி காட்டியுள்ளார்!
பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான கருப்பு முருகானந்தம் கடந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்டார். டிடிவி தினகரனின் சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர் இவர்!மேலும், டிடிவி தினகரனின் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் உண்மையை வெளியிடத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்!