தேர்தல் களம் 2019

11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..!திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு…!

வேலூர் காட்பாடியில் வருமான வரிச்சோதனையில் கணக்கில் வராத 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் குடோனில் இருந்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கடந்த ஒன்றாம் தேதி அன்று, வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. அந்த ரூபாய் நோட்டு பண்டல்கள் மீது வார்டுகளின் பெயர்கள் அச்சிடப்பட்டு இருந்தன.

இதைத் தொடர்ந்து வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்கள் சிலருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மொத்தமாக 11 கோடியே 63 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், வருமான வரித்துறை அறிக்கை அளித்திருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , வேலூர் மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், சிமெண்ட் குடோனுக்குச் சொந்தக்காரரான தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்க முயற்சித்தல்,வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளில் சீனிவாசன் மற்றும் தாமோதரன் மீதும், தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தல் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவின் கீழ் கதிர் ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

திருச்செந்தூரில் ஓட்டு கேட்டு வந்த கனிமொழிக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு

admin

வைகோ.,வால்…நாங்க அடைந்த அதே நிலையை திமுக.,வும் அடையும்! சுதிஷ் சாபம்..!

admin

தோல்வி பயத்தில் திமுக…! “பிரதமர் நரேந்தர மோடி” படத்துக்கு தடை கோரி மனு..!

admin

Leave a Comment