அரசியல்

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

சபாநாயகர் தனபாலை அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோட்டீஸுக்கு இந்த எம்.எல்.ஏக்கள் அனுப்பும் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இதனால் மேற்கூறிய 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

Related posts

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக திட்டமிட்டு அரசியல் செய்ய முயற்சிக்கிறது…! இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது:- பொள்ளாச்சி ஜெயராமன்

admin

திரிணாமுல் எம்எல்ஏ சுட்டுக்கொலை…..! பாஜகவின் முகுல்ராய் தான் கொலையாளியா..? திடுக்கிடும் தகவல்கள்.!

admin

பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு , பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி தகவல்

admin

Leave a Comment