இந்தியா தேர்தல் களம் 2019

வாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…! மக்கள் வெள்ளத்தில் மோடி…!

உ.பி.,யில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், இன்று(ஏப்.,26) மோடி மனுத்தாக்கல் செய்வதை முன்னிட்டு பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாரணாசி சென்றனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமனி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார், மத்திய அமைச்சரும் லோக்ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மோடியுடன் சென்றனர். இருப்பினும் தேர்தல் அதிகாரியின் அறைக்கு வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் அறைக்கு பக்கத்து அறையில் கூட்டணி கட்சியினர் காத்திருந்தனர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் மோடியுடன் சென்றனர்.

நேற்று மோடி 7 கி.மீ., பேரணி சென்ற போதும், இன்று மனுத்தாக்கல் செய்ய சென்ற போதும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மக்களும் சாலையின் இரு பக்கங்களில் கூடி நின்று மலர் தூவியும், கோஷமிட்டும் மோடியை வாழ்த்தினர்.

சமீபத்தில் அமேதி தொகுதியில் மனுத்தாக்கல் செய்ய சென்ற காங்., தலைவர் ராகுல், தனது சகோதரி பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரோ, அவர்களின் மகன் மற்றும் மகள், தாயார் சோனியா ஆகிய குடும்ப உறுப்பினர்களுடன் சென்றார். ஆனால் பா.ஜ., தங்களின் பலத்தை காட்டும் விதமாக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளது.

Related posts

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் விபத்து..! வீடியோ

admin

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்..! அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ்…!

admin

தோல்வி பயத்தில் திமுக…! “பிரதமர் நரேந்தர மோடி” படத்துக்கு தடை கோரி மனு..!

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com