திருப்பதி செல்ல போறீங்களா? செப்டம்பர் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருப்பதி செல்ல போறீங்களா? செப்டம்பர் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருப்பதி செல்ல போறீங்களா? செப்டம்பர் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு

செப்டம்பர் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மாலை நான்கு மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம் போல் 27ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாத பத்மாராதனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு டிக்கெட் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை  (ஜூன் 27 ஆம் தேதி) காலை 10:00 மணி முதல் 29 ஆம் தேதி காலை 10:00 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

பின்னர் முன்பதிவு செய்த பக்தர்களில்,  சேவைகளில் கலந்து கொள்வதற்கான பக்தர்கள் கம்ப்யூட்டரில் நடத்தப்படும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.